ஐ.நா. பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் வன்னிப் பிரச்சினை: நிகழ்ச்சி நிரலில் சேர்ப்பு

un-meetingஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் எதிர்வரும் புதன்கிழமை (29.04.09) வன்னியில் உருவாகியிருக்கும் மனிதாபிமானப் பிரச்சினை தொடர்பாக விவாதிக்கப்படவிருக்கின்றது. இதற்கேற்றவாறு பாதுகாப்புச் சபைக் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் இந்தப் பிரச்சினையும் இணைக்கப்பட்டிருக்கின்றது.

ஆயுத மோதல்களில் சிறுவர்கள் ஈடுபடுத்தப்படுவது தொடர்பான பாதுகாப்புச் சபையின் செயற்குழு 29 ஆம் நாள் ஆராயவிருக்கும் போதே வன்னி நிலைமைகள் தொடர்பாகவும் ஆராயப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

பாதுகாப்புச் சபையில் இந்தப் பிரச்சினையை விவாதிக்க அனுமதிக்கும் எண்ணம் தமக்கு இல்லை என மெக்சிக்கோ ஏற்கனவே தமக்குத் தெரிவித்ததாக சிறிலங்காவின் வெளிவிவகார செயலாளர் பாலித கோகன்ன முன்னர் தெரிவித்திருந்த போதிலும், மெக்சிக்கோ பின்னர் அதனை மறுத்திருந்தது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.