இந்திய ஆன்மீகக் குரு ரவிசங்கர் திங்களன்று கொழும்பு செல்கின்றார்: வவுனியா முகாம்களுக்கும் நேரில் செல்வார்

sri_sri_ravi_shankarஇந்தியாவின் ஆன்மீகத் தலைவரும் வாழும் கலை நிலையத்தின் நிறுவனருமான சிறீ சிறீ ரவிசங்கர் மூன்று நாள் பயணம் ஒன்றை மேற்கொண்டு நாளை மறுநாள் திங்கட்கிழமை சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு செல்லவிருக்கின்றார்.

கொழும்பு செல்லும் அவர், பெளத்த மதத் தலைவர்களையும், முக்கிய அரசியல் தலைவர்களையும் சந்தித்து தற்போதைய அரசியல் மற்றும் வன்னியில் உருவாகியிருக்கும் மனிதாபிமானப் பிரச்சினைகள் தொடர்பாகவும் ஆராய்வார்.

அரச தலைவர் மகிந்த ராஜபக்சவையும் அவர் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கொழும்பில் இருந்து வவுனியாவுக்கும் செல்லவுள்ள அவர், அங்கு இடம்பெயர்ந்தவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள முகாம்களுக்குச் சென்று முகாம்களில் உள்ளவர்களின் துன்பங்களையும் நேரில் அறிந்துகொள்வார்.

வவுனியாவில் வாழும் கலை நிலையத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்பாடுகள் தொடர்பாகவும் அவர் நேரில் பார்வையிடுவார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.