ஐ.நா.பிரதிநிதி; வன்னிக்கான வருகையை இலங்கை அரசாங்கம் தடுக்ககூடாது – விடுதலைப்புலிகள்

ltte_p_nadesanமக்களின் நிலைமையை அறிய இலங்கை வந்துள்ள ஐ.நா.பிரதிநிதி நம்பியாரின் வன்னிக்கான வருகையை இலங்கை அரசாங்கம் தடுக்ககூடாது என தமிழீழ விடுதலைப்புலிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இது தொடர்பில் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளதாவது,

பொதுமக்களை இழப்புகளில் இருந்து காப்பாற்றக்கூடிய ஒரேi அமைப்பான ஐக்கியநாடுகள் சபையானது,வன்னி மக்களை காப்பாற்றமுடியாது என்றால் அவர்களை யாரால் காப்பாற்றமுடியும்.

வன்னியில் உள்ள மக்களின் நிலையை அறிந்துகொள்ள இலங்கைவந்துள்ள ஐ.நா.பிரதிநிதி நம்பியாரின் வன்னிக்கான வருகையை இலங்கை அரசாங்கம் தடுக்ககூடாது.

அவர் வன்னி வந்தால் உண்மை நிலை தெரிந்துவிடும் என்பற்காகவே அவரின் வருகையை இலங்கை அரசாங்கம் தடுத்துள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.