திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கம்

barathiஇலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக, திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கத்தை திரைப்படத் துறையினர் தொடங்கியுள்ளனர்.

இலங்கையில் வரும் திங்கள்கிழமைக்குள் போரை நிறுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதை இயக்குநர் பாரதிராஜா சென்னையில் சனிக்கிழமை தெரிவித்தார்.

தமிழ் ஈழ ஆதரவு இயக்கம் சார்பில் சென்னையில் இம்மாதம் 23-ந் தேதி தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படும். 21-ந் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நடிகர் -நடிகைகள் உண்ணாவிரதத்துக்குப் பதிலாக இப்போராட்டம் நடத்தப்படும் என்றார் பாரதிராஜா.

நடிகர் சத்யராஜ், பெப்சி தலைவர் வி.சி.குகநாதன், இயக்குநர்கள் மணிவண்ணன், மனோபாலா ஆகியோரும் இதை வலியுறுத்தியே நிருபர்களிடம் பேசினார்கள்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.