ரெண்டு வழக்கு-இலங்கைக்கு ஆயுத உதவி, ஆள் உதவி யாரை கேட்டுக் கொடுத்தீங்க.

congressரெண்டு வழக்கு. ரெண்டுமே தி.மு.க.வுக்கும் காங்கிரசுக்கும் தலைவலிய கொடுக்கறதுதான். ஒன்று மூத்த வக்கீல் கருப்பன் மூலமா கிளம்புது. இலங்கைக்கு ஆயுத உதவி, ஆள் உதவி யாரை கேட்டுக் கொடுத்தீங்க. ஆயிரம்கோடி பணம் கொடுத்த நோக்கமென்ன…? இந்தியர்களோட வரிப்பணத்தை இப்படி கண்டமேனிக்கு செலவு செய்ய அதிகாரம் கொடுத்தது யாரு. மந்திரிசபையா? எப்போ கூடி முடிவெடுத்துச்சு. என்னவென்று முடிவெடித்தது. இல்ல, பிரதமரா…? இப்படி அவர் தனியா முடிவெடுக்க அதிகாரம் இருக்கா? அப்படீன்னு கேட்டு ஒரு வழக்கு போட்டிருக்காரு.

எப்படியோ வழக்கு ஏற்கப்-பட்டிருக்கு. பிரதமருக்கும் சம்பந்தப்பட்டவர்களுக்கும் விளக்கம் தாங்கோ அப்படீன்னு உத்தரவு போட்டிருக்காரு நீதிபதி…”

“இன்னொரு வழக்கு, திருச்சி வேலுசாமி போடுறது. ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் பல திருப்புமுனை அவரை மையமா வெச்சுதான் நடந்தது. ஜெயின் கமிஷன் அபிடவிட் தாக்கல் செய்தவரு. அவரோட வாக்குமூலத்தை வச்சுதான் சுப்ரமணியசாமி, சந்திராசாமி மேல எல்லாம் விசாரணை நடத்தணும்னு ஜெயின் கமிஷன் சொன்னது. உண்மைக் குற்றவாளிகள் இன்னும் முழுமையாக கண்டுபிடிக்கப்படவில்லை என்று தீர்ப்பு சொன்னது. அந்த அடிப்படையில்தான் இப்போ நீதிமன்றத்துல ஒரு வழக்கு போட்டிருக்காரு வேலுசாமி. இதுக்கு வழக்கறிஞரும் அதே கருப்பன்தான். ராஜீவ் கொலையில் உண்மைக் குற்றவாளிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஜெயின் கமிஷன் சொன்னபடி சுப்ரமணிய சாமி, சந்திராசாமியை எல்லாம் கடந்த பத்து வருஷமா விசாரிக்காமலே விட்டு வச்சிருக்கிறது ஏன்? என்ன காரணம். இப்படி ஜெயின் கமிஷன் சொன்ன பிறகும் மௌனமாக இருந்து கொண்டு நளினி, முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட பலரையும் 17 வருஷமா ஜெயிலுக்குள்ள வச்சிருந்தா எப்படி..? அதுக்கு யார் பொறுப்பு..? ஜெயின் கமிஷன் சொன்ன உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முயற்சிக்காமலேயே நளினி வகையறாக்களை சிறையில் வைத்திருக்க காரணம் என்ன? பதில் சொல்வது யார் என்றெல்லாம் கேட்டிருக்கிறார். சர்வதேச மனித உரிமை எல்லாம் இதில் வருது. பெரும்தொகை நஷ்டஈடும் கோரப்படுகிறது.

Thanks to : www.kumudam.com

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.