தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் மகள் என வெளிவந்த புகைப்படம் போலியானது

2135jஅண்மையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த புதுக்குடியிருப்பு பிரதேசத்தை இராணுவம் கைப்பற்றியபொழுது, தேசியத் தலைவரின் புகைப்படங்கள் அடங்கிய ஒரு அல்பத்தையும் இராணுவம் கண்டு எடுத்தது.

அதில் தேசியத்தலைவர் அவர்களின் மகள் துவாராக பிரபாகரன் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்துபகொண்டிருப்பதாக ஒரு புகைப்படம் முதலில் அரசாங்க இணையத்தளங்களில் வெளிவந்தது.

அப் புகைப்படங்களை வைத்து தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் விரோதிகள் சிலர் தேசியத்தலைவருக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உண்மையில் அப் புகைப்படத்தில் உள்ளவர் துவாரகா இல்லை. அப் புகைப்படத்தில் உள்ளவர் டென்மார்க்கில் வசித்துவரும் தலைவர் அவர்களின் உறவினர்களின் மகள். அப் புகைப்படத்தில் டென்மார்க்கில் Gymnasium என்று அழைக்கப்படுகின்ற உயர்கல்வி நிறைவின்போது வழங்கப்படுகின்ற தொப்பி அணிந்தபடி அந்த படத்தில் அப் பெண் காட்சியளிக்கிறார்.

இதன் ஊடாக இவர்களின் பொய்ப்பிரச்சாரம் முடியடிக்கப்பட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.