பரிஸ் லாச்சப்பலில் மக்கள் தன்னெழுச்சியான வீதி மறியல் போராட்டம்

la20chappel202004சிறிலங்கா அரசு மிக மோசமான இனப்படுகொலையை இன்று நடத்தியுள்ள நிலையில் பிரான்சில் தன்னெழுச்சியாக மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.பிரான்சின் தலைநகர் பரிசின் ரொக்கடரோ பகுதியில் கடந்த 15 நாட்களாக தொடர்ச்சியாக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் இன்றும் அங்கும் போராட்டம் தொடர்ந்துகொண்டிருக்கும் நிலையில் தமிழ் மக்களின் கேந்திர மையமான லாச்சப்பல் பகுதியில் மக்கள் வீதி மறிப்பு போராட்டத்தில் குதித்துள்ளனர்.
ஆயிரக் கணக்கான மக்கள் தற்போது அப்பகுதியில் திரண்டுள்ளதாக தெரியவருகின்றது.  கூடி நிற்கும் மக்கள் சிறிலங்காவின் இனப்படுகொலைக்கு எதிராக கோசங்களை எழுப்பியபடி மிகவும் கவலையுடனும், ஆவேசத்துடனும் காணப்படுவதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். தொடர்ந்தும் அப்பகுதியை நோக்கி மக்கள் பெருமளவில் வந்து குவிந்துகொண்டிருக்கின்றனர்.
இதேவேளை, போக்குவரத்துக்கள் பல பாதிக்கப்பட்டுள்ளதால் தற்போது காவல்துறையினர் அங்கிருந்து மக்களை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும், மக்கள் கலைந்து செல்ல மறுத்துள்ள நிலையில் எரி வாயுக்களை பிரயோகித்ததாகவும் தெரியவருகின்றது.
Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.