வடபகுதி பாடசாலைகளை மூடுமாறு மகிந்த திடீர் உத்தரவு

சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் உத்தரவை அடுத்து வடபகுதி பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் 27 ஆம் நாள் வரை மூடப்பட்டுள்ளதாக கல்வித் திணைக்களம் திடீரென அறிவித்துள்ளது

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை தங்க வைப்பதற்காகவே பாடசாலைகளை தற்காலிகமாக மூடுமாறு வடபகுதி கல்வி பணிப்பாளர்களுக்கு கொழும்பில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மகிந்தவின் உத்தரவினையடுத்து, கொழும்பில் உள்ள கல்வித் திணைக்களத்தில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் நடைபெற்ற அவசர கூட்டத்தின் பின்னரே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளையில் இடம்பெயர்ந்த மக்கள் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டால் பாடசாலைகளை திட்டமிட்டபடி 27 ஆம் நாள் தொடங்கமுடியாது என்றும் குறைந்தது ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் ஆகும் என்றும் வடபகுதி கல்வி அதிகாரிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.தமிழர்களின் கல்வியும் திட்டமிட்ட முறையில் நசுக்கப்படுவதாக யாழ்ப்பாணத்தில் உள்ள கல்விமான்கள் விசனம் தெரிவித்திருக்கின்றனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.