இலங்கை பிரச்சினைக்காக தி.மு.க தலைமை போராட்டம் அறிவிப்பு

20040524134512karunanidhi_sonia203இலங்கை பிரச்சினைக்காக, தி.மு.க. நாடுதழுவிய போராட்டம் அறிவிப்பு. வரும் 23.04.2009அன்று நாடுதழுவிய பந்திற்கு தி.மு.க தலைவர் அழைப்பு விடுத்து உள்ளார்.இலங்கையில் நிரந்த போர் நிறுத்தம் கோரி வரும் 23ம் தேதி தமிழகத்தில் பொது வேலை நிறுத்தம் நடைபெறும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

அவர் மேலும், ‘’இப்பொது வேலை நிறுத்தத்தில் அனைத்து கட்சியினரும் அமைதியான முறையில் கலந்துகொள்ள வேண்டும்.

மத்திய அரசு உடனடியாக போர் நிறுத்தத்தை வலியுறுத்த வேண்டும்’’ என்றும் அறிவித்துள்ளார்.

தமிழ் சினிமா
23-ந் தேதி அன்று படப்பிடிப்பு உள்ளிட்ட சினிமா சம்பந்தப்பட்ட அனைத்து வேலைகளும் நடைபெறாது என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன் கூறியுள்ளார்.

அவசர த‌ந்தி

இலங்கையில் உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என இலங்கை அரசுக்கு இறுதி எச்சரிக்கை விடுக்குமாறு வலியுறுத்தி, முதல்வர் கருணாநிதி பிரதமருக்கு அவசர தந்தி அனுப்பியுள்ளார். இலங்கையில் போர் இறுதி கட்டத்தை அடைந்துள்ள நிலையில், போரை உடனடியாக நிறுத்த இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த தந்தியில் குறிப்பிட்டுள்ளார். இதே கருத்தை வலியுறுத்தி காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் வெளியுறவு துறை அமைச்சர் பிரணாபுக்கும் அவசர த‌ந்தி அனுப்பியுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.