ஜநா செயலர் இலங்கை இனவெறி அரசுக்கு ஆசிர்வாதம் தமிழ் இனஅழிப்பை தங்கு தடையின்றி நடத்தலாம் இலங்கை அரசுக்கு பாராட்டு

20081211185508ban_203x152பாதுகாப்பான இடங்களை நோக்கி பெருந்தொகையான பொதுமக்கள் வருகை தந்தது வரவேற்கத்தக்க விடயமென ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூனின் ஊடக அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும் மோதல் இடம்பெறும் பகுயில் சிக்கியுள்ள ஏனைய பொதுமக்கள் குறித்து ஆழ்ந்த கவனம் செலுத்துவதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, பொதுமக்கள் செறிந்து வாழும் பகுதிகளின் மீது பாரிய ஆயுதங்களால் தாக்குதல் நடத்தப்படுவதும், மோதல் இடம்பெறும் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியேறுவதை விடுதலைப் புலிகள் தடுப்பதும் கவலையளிப்பதாகவும் பான் கீ மூனின் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.