48 மணி நேர கெடு முடிந்ததும், ராணுவம் தாக்குதலைத் தொடங்கி விடும்

அப்பாவித் தமிழர்கள் புலிகளின் பகுதியிலிருந்து விலகி, ‘பாதுகாப்பான பகுதி’ என அரசால் அறிவிக்கப்பட்ட பகுதிகளுக்கு வர இலங்கை அரசு 48 மணி நெர கெடுவை விதித்துள்ளது. இந்தக் கெடு இன்று மாலையுடன் முடிவடைகிறது.

ஆனால் இந்த கெடுவை ஏற்று அரசுப் பகுதிக்கு வர மக்களிடையே முழு ஆதரவு இல்லை. மிகவும் சொற்ப எண்ணிக்கையிலான தமிழர்களே இடம் பெயர்ந்துள்ளனர். மற்றவர்கள் வரவில்லை.

இந்த நிலையில், 48 மணி நேர கெடு முடிந்ததும் ராணுவம் மீண்டும் தாக்குதலைத் தொடங்கும் என இலங்கை வெளியுறவு அமைச்சர் பலித கொஹனா எச்சரித்துள்ளார்.

இதனால் இரண்டரை லட்சம் தமிழர்களின் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. ராணுவம் நடத்தப் போகும் கடும் தாக்குதலில் சிக்கி பெருமளவில் உயிரிப்பு ஏற்படும் அபாயமும் அதிகரித்துள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.