அண்ணனும் தம்பியும் சிங்கள இனமும் தமிழனை அழிப்பதை நிறுத்த முடியாதாம்

ltte_atrocities_20061201_gotabhaya_rajapaksa_09முல்லைத்தீவு மாவட்டத்தில் படையினர் மேற்கொண்டுவரும் தாக்குதல் நடவடிக்கைகளை இடைநிறுத்த வேண்டிய அவசியம் இல்லை என சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, பிரித்தானியப் பிரதமர் கோர்டன் பிறவுணிடம் நேரடியாகவே தெரிவித்திருக்கின்றார்.

வடக்கில் தொடரும் போரினால் பெரும் தொகையான பொதுமக்கள் தொடர்ந்தும் கொல்லப்பட்டு வருவதால், பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் வெளியேறுவதற்கு வசதியாக தாக்குதல் இடைநிறுத்தம் ஒன்றை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என நேற்று திங்கட்கிழமை இரவு தொலைபேசி மூலமாகத் தொடர்புகொண்ட பிரித்தானியப் பிரதமர் கோரியதாகவும், ஆனால் அதனை ஏற்க முடியாதென அரச தலைவர் மகிந்த ராஜபக்ச திட்டவட்டமாக நிராகரித்து விட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.”பாதுகாப்பு வலயப் பகுதியில் இருந்து 35 ஆயிரம் மக்கள் வெளியேறி வந்துள்ளார்கள்” எனத் தெரிவித்த மகிந்த, அதனால் போர் நிறுத்தம் ஒன்று அவசியமற்றதாகின்றது என பிரித்தானியப் பிரதமருக்கு விளக்கிக்கூறியதாக அரச தலைவர் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.