டென்மாக்கில் தமிழ் மகனொருவரால் முன் எடுக்கப்பட்ட விசித்தரமான கவனயீர்ப்பு (காணொளி இணைப்பு)

ஐரோப்பிய ஒன்றியத்தால் தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்பட்டதை எதிர்த்தும் இந்த முடிவால் ஒவ்வொரு தமிழ்மகனும் பயங்கரவாதிகளாக தான் சித்தரிக்கப்படுவார்கள் எனக்கூறியும் அதனால் தான் டென்மார்க் காவல்துறையில் சரணடையப்போவதாக கூறி டென்மார்க் தொலைக்காட்சியையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு தனது பகுதி காவல்துறை பணிமனைக்கு சென்றார்.
காவல்துறைப் பணிமனையில் உள்ள  காவல்துறை அதிகாரிகளிடம் சரணடையப் போவதாக கூறியுள்ளார். ஆனால் அவரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்யவில்லை.
தொலைகாட்சியில் செவ்வி கொடுத்த மனோ என்ற பாடசாலை ஆசிரியரான குறிப்பிட்ட தமிழ் மகன் தனது இந்த முடிவானது டென்மார்க் அரசியல்வாதிகளை கவர்ந்திழுக்கும் ஒரு முடிவு எனவும் மற்றும் டென்மார்க் பயங்கரவாத சட்டத்துடன் நேரடியாக முரண்பட தான் முடிவெடுத்துள்ளதாகவும் கூறினார்.
காவல்துறையினர் தொலைக்காட்சிக்கு இது தொடர்பாக செவ்வி வழங்க மறுத்துவிட்டனர். ஆனால் வரும் நாட்களில் தாம் இந்த விசித்திர சரணடைவு குறித்து விசாரிக்க உள்ள தாக கூறியுள்ளனர்.காணொளியைப் பார்வையிட
Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.