பிரான்சில் 17வது நாளாக மக்கள் எழுச்சிப் போராட்டம்: 15வது நாளாக நான்கு இளைஞர்களின் உண்ணாநிலைப் போராட்டம்

dsc_5649பிரான்சில் 17வது நாளாக மக்கள் எழுச்சிப் போராட்டம் மிக உணர்வுபூர்வமாக நடைபெற்றுக் கொண்டிருக்க,15வது நாளாக நான்கு இளைஞர்களின் உண்ணாநிலைப் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

சிறிலங்கா அரசின் இனப்படுகொலையை நிறுத்தக்கோரி 17 நாட்களாக இரவு பகல் பாராது பிரான்சின் மனிதவுரிமைச்சதுக்கத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களின் மானிடக்குரல் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

உடனடியாக பெரும் மாற்றம் ஏற்படாவிட்டாலும் உண்ணா நிலையிருந்து உடல்வருத்தி, தொடர்ச்சியான மககளின் ஒன்றுகூடல் படிப்படியான மாற்றங்களை நிகழ்த்தத் தொடங்கியுள்ளன.

அரசியல் ரீதியான அழுத்தங்கள் ஏற்பட்டிருக்கிறது அமைதியாய் இருந்த ஊடகங்கள் பேசத்தொடங்கியுள்ளன எனவே தொடற்சியான மக்கள் வருகை சாதக நிலையை ஏற்படுத்தும்.

உண்ணாவிரதிகள் கடந்த சனிக்கிழமை குறிப்பிட்டதுபோல காத்திரமான முடிவு கிடைக்காதவிடத்து இன்று மதியத்துடன்; நீர்இன்றி உண்ணா நிலைப்போராட்டத்தை தொடரவிருக்கிறார்கள்.

இதேவேளை எதிர் வரும் சனிக்கிழமை ஒரு மணிக்கு பிரான்சின் மனிதவுரிமைச்சதுக்கத்திலிருந்து நாடாளுமன்றம் நோக்கி பெருமளவு மக்கள் படையாய் திரண்டு பயணிக்கவிருக்கிறார்கள். எனவே பிரான்சில் வாழும் அனைத்து தமிழ் மக்களையும் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடப்பட்டிருகிறது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.