விடுதலைப் புலி செயற்பாடுகளை கண்காணிக்க பாலித்த கொஹனே மலேசியா விஜயம்

palitha_koahana-1தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் குறித்து கண்காணிக்கும் நோக்கில் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித்த கொஹனே மலேசியாவிற்கு விஜயம் செய்துள்ளார்.

மலேசியாவில் தமிழீழ விடுதலை புலி செயற்பாடுகள் உயர்வடைந்து செல்வதாக கிடைக்கப் பெற்ற புலனாய்வுத் தகவல்களை அடுத்து கொஹனே அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுத கொடுக்கல்கள் வாங்கல் தென் கிழக்காசிய நாடுகளை மையப்படுத்தி நடத்தப்பட்டு வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், இறுதிக் கட்ட போராட்டங்களின் போது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மலேசியாவில் தஞ்சமடையக் கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழீழ விடுதலைப் புலிகள் மலேசியாவில் ஊடுருவுவதனை தடுக்கும் நோக்கில் பாலித்த கொஹனே அந்நாட்டு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.