அரசியல் தீர்வுக்கான பேச்சுக்களில் போரிடும் தரப்பினர் ஈடுபடுத்தப்பட வேண்டும்: ஹிலறி கிளின்ரன்

hilary clintonமனிதாபிமானச் சேவைகளுக்கும் அரசியல் தீர்வு ஒன்று காண்பதற்குமான மிகப்பெரிய தேவை ஒன்று அங்கு (இலங்கையில்) இருக்கின்றது. இனப் பிரச்சனைக்குப் பொருத்தமான – சரியான – தீர்வு காணப்பட வேண்டும் எனில் – அதற்கான கலந்துரையாடல்களில் போரிடுபவர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும் என அமெரிக்காவின் வெளிவிவகார செயலாளர் ஹிலறி கிளின்ரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நேற்று புதன்கிழமை அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

ஆசியாவின் மிக நீண்ட போரை முடிவுக்கு கொண்டுவரலாம் என்ற நோக்கத்துடன் சிறிலங்கா அரசு மேற்கொண்டு வரும் படை நடவடிக்கை அங்கு சொல்ல முடியாத துன்பத்தை மக்களுக்கு ஏற்படுத்தி வருகின்றது.

25 வருட காலப் போரை நிறைவு செய்ய முற்பட்டுவரும் சிறிலங்கா, அங்கு பெரும் துன்பத்தை ஏற்படுத்தி வருகின்றது. அது தொடர்பில் முழு உலகமும் ஏமாற்றம் அடைந்துள்ளது என்பதும் சிறிலங்கா அரசுக்கு தெரியும் என்றார் அவர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.