யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரிட்டனுடன் இணைந்து நிவாரண பணியாற்ற பிரான்ஸ் முயற்சி

bernard-kouch150மோதல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரிட்டனுடன் இணைந்து கூட்டாக நிவாரணப் பணியில் ஈடுபடுவதற்கான நடவடிக்கை ஒன்றை ஆரம்பிக்க நாம் முயற்சிக்கின்றோம் என்று பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் குச்னர் வானொலிப் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டம் தொடர்பாக பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லிபான்ட்டுடன் கலந்தாராய இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை அரசாங்கம் இராணுவ நடவடிக்கைகளை அதிகரித்துள்ள நிலையில் கடந்த இருநாட்களில் 60 ஆயிரம் பொதுமக்கள் வெளியேறி இருப்பதாக நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளது.

நிவாரணப் பணிகள் அதிகளவில் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. அரசாங்கங்கள் தொடர்பில் மக்கள் மிகவும் களைப்படைந்துள்ளமை துரதிஷ்டவசமானது என்று குச்னர் பிரான்ஸ் வானொலிக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் மேலும் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.