இலங்கையின் இன்றைய நிலை ஒரு பயங்கர மனிதப் பேரவலம் : ஹிலாரி கிளிங்டன்

hilary-clinton1இலங்கையின் தற்போதைய நிலைமை ஒரு பயங்கரமான மனிதப் பேரவலம் என அமெரிக்காவின் ராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளிங்டன் தெரிவித்துள்ளார்.

கடந்த 25 வருடங்களாக நிலவும் இனப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக இலங்கை அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளும், துன்பங்களும் அனைத்துலக நாடுகளை ஏமாற்றமடையச் செய்துள்ளன என்பது இலங்கை அரசாங்கத்திற்கு தெரியும்.

இலங்கையின் தற்போதைய நிலைமை ஒரு பயங்கரமான மனிதப் பேரவலம். நாங்கள் இலங்கை அரசுக்கு அழுத்தத்தைப் பிரயோகிப்பதன் மூலம், யுத்தத்தை நிறுத்தி, யுத்தப் பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டும். இதற்கு அரசியல் தீர்வு ஒன்று காணப்பட வேண்டியத் அவசியம் எனவும் செயலர் ஹிலாரி கிளிங்டன் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.