வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக கட்சிப் பிரமுகர்கள் அறிவிப்பு – ஜேர்மனிய உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது

_dsc5984டுசல்டோவ் மாநில நாடளுமன்றத்தின் முன்பாகக் கடந்த 8 நாட்களாக நடைபெற்று வந்த கவனயீர்ப்பு உண்ணா நிலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களுடன் நேற்று மாலை யேர்னியின் முக்கிய கட்சிப் பிரமுகர்கள் நடத்திய பேச்சுகளை அடுத்து உண்ணா நிலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று அரசியற் கட்சியினர் வாக்குறுதியை அளித்ததுடன் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடும்படியும் வேண்டுகோள் விடுத்தனர்.இதனை அடுத்து உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தமது போராட்டத்தை முடிவிற்குக் கொண்டு வந்தனர். இவ் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தமிழ் மருத்துவர் செல்வி பிரசாந்தி லோகேஸ்வரன் பழச்சhறு கொடுத்து முடித்து வைத்தார்.

இப் போரட்டங்களின் தொடர்ச்சியாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை பேர்லினில் உள்ள வெளிநாட்டு அமைச்சுக்கு முன்பாக மாபெரும் கண்டனப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

தமிழ்மக்களினால் 15 நாட்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய காவல்துறை அதிகாரியும் தமிழ்மக்களால் கௌரவிக்கப்பட்டர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.