தமிழின எதிரி மணிசங்கர் அய்யருக்கு கறுப்புக்கொடி செருப்பு வீச்சு

dscn0745ஈழத்தமிழர்களுக்கு எதிராக செயல்படும் மத்திய காங்கிரஸ் அமைச்சர் மணிசங்கர் அய்யர் நாகை மாவட்டம், சீர்காழியில் 03.02.2009 செவ்வாய் மதியம் 3.15 மணிக்கு சீர்காழி கொள்ளிட முக்கூட்டு அருகில் பெரியார் திராவிடர் கழகம், பா.ம.க., மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம் சார்பில் கருப்பு கொடி காட்டப்பட்டது. கண்டன முழக்கம் இடப்பட்டது.

மணிசங்கர் கார் மீது செருப்பு வீசப்பட்டது. பெரியார் திராவிடர் கழக நகர தலைவர் சீர்காழி பெரியார் செல்வம், பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட துணை செயலாளர் இரா.செந்தில்குமார், மாவட்ட விளையாட்டுக்குழு தலைவர் பொன்னழகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் வேலு குபேந்திரன், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட செயலாளர் மு. ஸ்டாலின், ம.தி.மு.க. மாவட்ட பிரதிநிதி இ.மார்கோனி, ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம் மாவட்ட செயலாளர் ராஜா மற்றும் பெரியார் திராவிடர் கழகம், பாட்டாளிமக்கள் கட்சி, விடுதலைச்சிறுத்தைகள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், ஏகாதிபத்திய திர்ப்பு இயக்கம் ஆகிய அமைப்புகளை சார்ந்த 100க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். 16 பேர்மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.