287 தமிழர்கள் பலி; கியூடெக் பணிப்பாளர் உட்பட 300 பேர் படுகாயம்

vanni_20090423001முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் சிறிலங்கா படையினர் இன்றும் நடத்திய அகோர எறிகணைத் தாக்குதல்களில் 287 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் கியூடெக் கரித்தாஸ் நிறுவனப் பணிப்பாளர் அருட்தந்தை வசந்தசீலன் அடிகளார் உட்பட 300-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

வலைஞர்மடம், அம்பலவன்பொக்கணை ஆகிய பகுதிகள் மீது மீது சிறிலங்கா படையினர் இன்று வியாழக்கிழமை செறிவான எறிகணை, ஆர்பிஜி உந்துகணை மற்றும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இத்தாக்குதலில் காயமடைந்த கியூடெக் கரித்தாஸ் நிறுவன பணிப்பாளர் அருட்திரு வசந்தசீலன் அடிகளார் தனது கால் ஒன்றை இழந்துள்ளார்.

சிறிலங்கா படையினரின் தாக்குதல்களில் படுகொலை செய்யப்பட்டவர்களில் 87 பேரின் உடலங்கள் முள்ளிவாய்க்கால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

கடந்த மூன்று நாட்களில் கத்தோலிக்க திருச்சபையின் முன்று அருட்தந்தையர்கள் காயமடைந்துள்ளனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.