இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் எம்கே நாராயணன் ‐ வெளியுறவுச் செயலர் சிவ்சங்கர்மேனன் நாளை கொழும்பிற்கு திடீர் விஜயம்:

narayanan__sivsankarஇந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் எம்கே நாராயணன் மற்றும் வெளியுறவுச் செயலர் சிவ்சங்கர்மேனன் ஆகியோர் நாளை கொழும்பிற்கான திடீர் விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன

சர்வதேச அழுத்தங்கள் தமிழகத்தில் தொடரும் தீவிர காங்கரஸ் எதிர்ப்பு அண்மிக்கும் தேர்தல் என்பவற்றை அடுத்து இந்த விஜயம் அமைவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து மக்கள் முழுமையாக வெளியேறும் வரையில் யுத்தநிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துவதற்கான அழுத்தத்தை கொடுப்பதற்காகவே இவர்களை காங்கிரஸ் உயர்பீடமும் இந்திய அரசாங்கமும் கொழும்பிற்கு அனுப்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இதனை தெரிந்து கொண்ட அரசாங்கம் தற்போது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைச் சுற்றி வளைத்திருப்பதாக பெரும் பிரச்சாரத்தை முடக்கி விட்டிருப்பதாகவும் அதன் மூலம் இந்தியாவின் யுத்த நிறுத்தக் கோரிக்கையை திசைதிருப்ப முனைவதாகவும் கொழும்பின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.