தமிழ்த் திரையுலகத்தினரால் தமிழீழ ஆதரவு இயக்கம் ஆரம்பம்

தமிழ்நாட்டில் தமிழ்த் திரையுலகத்தினால் திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கம் என்ற அமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பிலிம்சேம்பர் வளாகத்தில் திரையுலகத்தினரால் உண்ணாநிலைப் போராட்டம் இன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை முன்னெடுக்கப்படுகின்றது.

போராட்டத்தில் திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா, பாலு மகேந்திரா, இயக்குநர்கள் அமீர், சீமான், ஏ.ஆர்.முருகதாஸ், சரவண சுப்பையா, சேரன், மணிவண்ணன், வெற்றி மாறன், ஹரி, பிரவீன்காந்த், சுசிகணேசன், சசி, சமுத்திரகனி உள்ளிட்ட ஏராளமான இயக்குநர்கள் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.

நடிகர்களான சத்யராஜ், கஞ்சா கருப்பு, பாடலாசிரியர் தாமரை ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். போராட்டத்தில் கலந்துகொண்டோர் உணர்ச்சிப் பெருக்கோடும், கருப்புச் சட்டைகள் அணிந்தும் காணப்பட்டனர்.

இலங்கையில் போரை நிறுத்தி விட்டு சோனியா காந்தி தமிழகத்திற்கு வர வேண்டும். அதை விட்டு விட்டு இளவு வீட்டில் வந்து வாக்குக் கேட்கக் கூடாது. இலங்கையில் போரை நிறுத்தாவிட்டால் தொடர் போராட்டங்களில் திரையுலகம் ஈடுபடும் என எச்சரித்துள்ளனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.