போர் பகுதிக்கு செல்ல ஐ.நா. சபை குழுவை அனுமதிக்கமாட்டோம்

ltte_atrocities_20061201_gotabhaya_rajapaksa_091இலங்கையில் தற்போது நிலவும் சூழ்நிலை தனக்கு கவலை அளிப்பதாக ஐ.நா.சபை செயலாளர் பான் கி மூன் தெரிவித்து உள்ளார். போர் பகுதியில் ஏற்பட்டுள்ள நிலைமைகளை கண்காணிக்க ஐ.நா. சபை குழுவை அனுப்பி வைக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்த குழு போர் நடக்கும் பாதுகாப்பு பகுதிக்குள்ளேயே சென்று கண்காணிக்கும் என்றும் அவர் கூறினார்.

இதற்கு அதிபர் ராஜபக்சேயின் தம்பியும் இலங்கை பாதுகாப்புத்துறை செயலாளருமான கோதபயா ராஜபக்சே எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

இதுபற்றி அவர் பி.பி.சி. செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:

போர் பகுதியில் சிக்கியுள்ள பொதுமக்களை மீட்க தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அங்கு ஐ.நா. மனிதாபிமான குழு செல்வது சரியானது அல்ல. அது பொருத்தமாகவும் இருக்காது.

அந்த குழு போர் பகுதியில் இருந்து வெளியேறும் மக்களுக்கு வேண்டுமானால் உதவலாம். அரசுக்கும் உதவலாம்.

போர் பகுதியில் தற்போது செஞ்சிலுவை சங்கம் காயம் அடைந்தவர்களை வெளியேற்றி வருகிறது. பாதுகாப்பு பகுதியின் தென்பகுதியை நோக்கி ராணுவம் மெதுவாக முன்னேறி செல்கிறது. கனரக ஆயுதங்களை நாங்கள் பயன்படுத்தவில்லை. துப்பாக்கிகளை மட்டுமே பயன்படுத்துகிறோம் என்றார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.