வன்னியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 39 தடவைகள் வான் தாக்குதல்

tn_kifer-jetஇன்று காலை 7:55 மணிக்கும் 10:25 மணிக்கும் இடையில் மிகையொலி யுத்த வானூர்த்திகள் 39 தடவைகள் பறப்புக்களை மேற்கொண்டு குண்டு வீச்சுக்களை நடத்தியுள்ளன. இதனால் மக்களுக்கு ஏற்பட்ட சேதவிபரங்கள் குறித்து இதுவரை அறியப்படவில்லை. பிரதேசமெங்கும் புகைமண்டலமாக இருப்பதாகவும் சில இடங்களில் மரங்கள் பற்றி எரிந்துகொண்டிருப்பதாகவும் மக்களின் ஓலங்கள் கேட்டவண்ணமிருப்பதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

நேற்றையதினமும் 25ற்கும் மேற்பட்டதடவைகள் குண்டு வீச்சு தாக்குதல்களை நடத்தி 174 பேரை பலியெடுத்து 212 மக்களை படுகாயப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் வட பகுதியில் இடம்பெறும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் நிலைமையை நேரில் அவதானிப்பதற்காகவும் அரச பிரமுகர்களையும் சந்திப்பதற்காகவும் ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான மற்றும் அவசரகால உதவி இணைப்பாளர் ஜோன் ஹோம்ஸ் நேற்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் இவ்வேளையில் தாக்குதல் நடந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த சில தினங்களாக குறைவடைந்து காணப்பட்ட தாக்குதல், இந்திய அதிகாரிகளின் இலங்கை விஜயத்திற்குப் பின்னரே கடுமையாக மாறியுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவின் அறிவுறுத்தல் காரணமாகவே இலங்கை அரசானது தாக்குதல்களை அதிகரித்திருப்பதாக தெரியவருகிறது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.