ஒபாமா நிர்வாகத்தில் உள்ள வெள்ளை மாளிகை போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது

obamaஅமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா சார்பாக வெள்ளை மாளிகை இலங்கையில் உடனடியாக யுத்த நிறுத்தம் ஏற்படவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. சண்டையில் ஈடுபட்டிருக்கும் இரு தரப்பையும் உடனடியான போர் நிறுத்தம் ஒன்றை மேற்கொள்ளுமாறு ஓபாம அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த அறிக்கையானது நேற்று இரவு(அமெரிக்க நேரப்படி) விடுக்கப்பட்டுள்ளது.

இவ் அறிவித்தலானது இலங்கை அரசை மேலும் அழுத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுவரை காலமும், அமெரிக்க செனட்டர்கள், காங்கிரஸ் வாதிகள் மற்றும் வெளியுறவுச் செயலர்களால் மட்டுமே கண்டனங்கள் விடுக்கப்பட்டுவந்த நிலையில், முதல் முறையாகவும் நேரடியாகவும் அமெரிக்க வெள்ளை மாளிகை நிர்வாகம் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்க விடையமாகும்.

இச் சந்தர்ப்பத்தில் இக் கோரிக்கையை இலங்கை அரசு நிராகரிக்குமாயின் நேரடியாக ஓபாமாவின் நிர்வாகத்துடன் இலங்கை அரசு முரண்படும் நிலை தோன்றலாம். எனவே இலங்கை அரசானது இக்கோரிக்கையை அவ்வளவு எளிதில் உதாசீனம் செய்துவிடமுடியாது.

கடந்த காலங்களில் வடக்கில் இராணுவம் பல தாக்குதல்களை தொடுத்துள்ளபோதிலும், தென் இலங்கையில் புலிகள் எந்த தாக்குதலும் நடத்தவில்லை. கேந்திர முக்கியத்துவம் வாந்த நகரங்களை புலிகள் தாக்காததும், அவர்கள் தற்காப்பு யுத்தத்தில் மட்டுமே ஈடுபட்டு வரும் நிலையில் அமெரிக்கா புலிகள் தொடர்பான தனது நிலப்பாட்டை சிறிது மாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.