வைகோ: சிவசங்கர் மேனன் மற்றும் நாராயணன் பச்சைத் துரோகிகள்

vyko-24விருதுநகர் லோக்சபா தொகுதியில் உள்ள வெள்ளாகுளம்இ பள்ளபச்சேரிஇ அகத்தாபட்டிஇ வடக்கப் பட்டி, வில்லூர்இ முத்துலிங்காபுரம் கிராமங்களில் வைகோ பேசியதாவது:
இலங்கையில் நடக்கும் தமிழர்கள் மீதான தாக்குதலை நிறுத்தக்கோரி பேச செல்லும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், வெளியுறவு செயலர் சிவசங்கர் மேனன் பச்சைத் துரோகிகள்.நாலரை ஆண்டுகளுக்கு முன் இலங்கை அதிபர் ராஜபக்ஷே டில்லி வந்து இந்தியாவின் உதவியை கேட்டார்.

நான் அப்போதே இலங்கைக்கு ஆயுதங்கள் கொடுக்கக் கூடாது என்றேன். அதை மீறி ராடர்கள், ஏவுகணைகள், நிபுணர்களையும் மன்மோகன் சிங்கும் சோனியாவும் அனுப்பி வைத்தனர். மேலும் வேண்டிய பண உதவியையும் செய்து பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளிலும் இருந்து இலங்கை ஆயுதங்களை வாங்கி குவிக்க உதவினர். இதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. இந்தியா உதவியுடனே தமிழர்களை இலங்கை அழித்து வருகிறது.

விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து ஒரே நேரத்தில் 35 ஆயிரம் தமிழர்கள் வெளியேறினார் என்பது தவறான செய்தி. நிராயுத பாணியாக இருந்த அவர்களை இலங்கை ராணும் சுற்றி வளைத்து சிறை பிடித்துள்ளது. இதுவே உண்மை. ஒரு லட்சம் தமிழர்கள் செத்தபிறகு தற்போது போரை நிறுத்த சொல்வது நாடகம். இதற்கு கருணாநிதியும் துணைபோகிறார்.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் சென்ற 16 கப்பல்களை இலங்கைக்கு ஆதரவாக இந்திய ராணுவத்தினர் தகர்த்தனர். ஒருவனை கொலை செய்ய அரிவாள் கொடுத்தால் அவனை போலீஸ் முதல் குற்றவாளியாக சேர்க்கிறது. அதே போல் இலங்கைக்கு ஆயுதம் கொடுத்த இந்திய அரசும் அதன் தலைமையான சோனியாவும், மன்மோகனும் தமிழர்கள் கொலையில் குற்றவாளிகளே.

இவ்வாறு வைகோ அவேசமாகப் பேசினார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.