தமிழ் நாட்டில் இந்தியா, சிறீலங்கா தேசியக் கொடிகள் எரிப்பு

primary-medium1ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து இன்று(25.04.09) தமிழ்நாட்டில் சென்னை, கோவை, ஈரோடு, தஞ்சாவூர், ஓசூர் முதலிய இடங்களில் இந்தியத் தேசியக் கொடியையும், சிறீலங்கா தேசியக் கொடியையும் எரித்து போராட்டம் நடைபெற்றது இப்போராட்டத்தை தமிழ்க் தேசிய விடுதலை இயக்கமும், தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சியும் இணைந்து நடத்தின. இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலையை இந்தியா தடுக்கத் தவறியதுடன், இப்படுகொலைக்குத் துணைநிற்பதே இந்தியாதான் என இவ்விரு அமைப்புகளும் குற்றம் சாட்டின. ஈழத்தமிழரைக் காப்பாற்ற அனைவரும் ஒன்றுதிரண்டு போராட வேண்டும் என்றும், வரும் தேர்தலில் காங்கிரசைத் தோற்கடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டன.

சென்னையில் தோழர்கள் சிவ. காளிதாசன், நாத்திகக்கேசவன், உட்பட இருபது பேரும் , ஈரோட்டில் தோழர்கள் மோகன்ராசு, இரவி, கண்ணன் உட்பட அய்வரும், கோவையில் தோழர்கள் தேவேந்திரன், பாரதி, சங்கர், தமிழரசன் உட்பட எண்மரும், ஓசுரில் மாரிமுத்து, முருகானந்தன் ஆகிய இருவரும், தஞ்சாவூரில் தோழர்கள் இராசேந்திரன், அண்ணாதுரை, ஆறுமுகம், விடுதலைச்சுடர் உட்பட பதிமூன்று பேரும் கொடிகளையெரித்து கைதாகினர்.

சென்னை மற்றும் தஞ்சையில் கைதான தோழர்கள் மாலை விடுதலை செய்யப்பட்டனர். மற்றவர்கள் அனைவரும் பதினைந்துநாள் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.