பேர்லின் கண்டன ஆர்ப்பாட்டம் 5 ஆயிரத்திற்கு அதிகமானோர் பங்கேற்பு

_dsc7359பேர்லின் கண்டன ஆர்ப்பாட்டம் 5 ஆயிரத்திற்கு அதிகமானோர் பங்கேற்பு
சிறீலங்கா அரசின் தமிழினப் படுகொலையில் உச்ச நிலையைக் கண்டித்து யேர்மனியில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் அங்கமாக யேர்மனியின் தலைநகரான பேர்லினில் கண்டனப் பேரணியும் ஆர்ப்பாட்டமும் இடம்பெற்றுள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை காலை 9:00 மணிக்கு பேர்லினில் அமைந்துள்ள யேர்மனி வெளிவிவகார அமைச்சின் செயலகத்தின் முன்னால் 5 ஆயிரம் வரையிலான மக்கள் ஒன்று சிறீலங்கா அரசின் தமிழினப் படுகொலைக் கண்டிப்பதுடன் அதனை யேர்மனி அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியே இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வந்த தமிழர்கள் ஆண்கள, பெண்கள், குழந்தைகள் என அனைவரும் தனித் தனியே யேர்மனியக் கலகத் தடுப்புக் காவல்துறையினரால் கடுமையான உடல் பரிசோதனை செய்யப்பட்டனர். தண்ணீர் போத்தல்கள், மக்கள் கொண்டு வந்த பைகள், தண்ணீர்ப் போத்தல்கள், சுலோகங்கள், என அனைவரும் துருவித் துருவி பரிசோதிக்கப்பட்டன. பின்னரே ஆர்ப்பாட்ட திடலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
வெளிவிவகார அமைச்சின் முன்னால் ஒன்றுகூடிய 5 ஆயிரம் வரையிலான தமிழர்களும் முற்பகல் 11மணி வரை இடம்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து பேர்லின் நெடுஞ்சாலை ஊடாக யேர்மனிப் பாராளுமன்றத்திற்கு அருகில் அமைந்துள்ள பிரண்டர்பேர்க் ரவர் முன்னால் வந்தடைந்தது.
பொதுச்சுடர் ஏற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின பொதுச்சுடரினை யேர்மனியின் ஆளும் கட்சியின் நாடளுமன்றஉறுப்பினர் ஏற்றிவைத்தார். அகவணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. கெசன் மாநிலத்தின் எஸ்.பி.டி கட்சியின் இளையோர் பொறுப்பாளரும், லிங்கப்பட்டாய் கட்சியின் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும் உரையாற்றினர். இதனைத் தொடர்ந்து இளையோர்களது எழுச்சி உரையும் இடம்பெற்றுள்ளன.
போஸ்டாம பிளற் தொடருந்து நிலைய நாற்சந்தியில் மறியல் போராட்ட்தில் ஈடுபட்டிருந்தனர். கண்டனப் பேரணியின் தொடக்கத்தில் யேர்மனி வெளியுறவு அமைச்சில கண்டன மனு கையளிக்கப்பட்டுள்ளது.
சிறீலங்காப் படையினர்மேற்கொண்டு வரும் தமிழ் இனப்படுகொலைகளை எடுத்துக்காட்டும் பாததைகளைத் தாங்கிச்சென்றதுடன் பேரணியின் முன்பாக சிறீலங்காப்படiயினர் தமிழர்கள் மீது எவ்வாறுதாக்குதலை நடத்துகிறார்கள் என்பதை சித்தரிக்கும் விதமாக நடித்துக்காண்பித்துச் சென்றனர்.

”தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற கோசத்துடன் கண்டன ஆர்ப்பாட்டம் நிகழ்வுகள் இரவு 18.30 மணியளவில் முடிவுற்றது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.