லண்டன் மாநகர் அதிர்கிறது

சிங்களப் பேரினவாதத்தின் தமிழினப் படுகொலையை நிறுத்தக் கோரியும் மரணத்தின் பிடியில் சிக்கித் தவிக்கும் வன்னி மக்களை காக்குமாறும் பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் இன்று மாபெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்குபற்றியுள்ள இவ் ஊர்வலமானது மில் பாங்க் (Mill Bank. TATE BRITAIN) இலிருந்து ஆரம்பித்து ரெம்பிள் பிளேஸ் (Temple Place) வரை செல்லவுள்ளது. எனினும் தற்போதும் மக்கள் அலைஅலையாக வந்து ஊர்வலத்தில் சேர்ந்தவண்ணம் உள்ளனர்.

இவ் ஊர்வலத்தில் பங்குபற்றிய அனைத்து மக்களும் தம் தமிழ் உணர்வுகளை வெளிப்படுத்தி கோசங்களை முழக்கியவண்ணம் செல்கின்றனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.