ஐந்து முனை படை நடவடிக்கைக்கு படையினர் தயார்! ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படலாம்?

20090114185121srilanka_203சிறீலங்காப் படையினர் பாரிய படை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள உள்ளதாக திட்டமிடப்பட்டுள்ளது. திங்கட்கிழமை அதிகாலை 2:00 மணியளவில் ஐந்து முனைகளில் சிறீலங்காப் படையினரின் முழுமையான படை பலத்துடன் பாரிய படை நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நந்திக்கடல், வட்டுவாகல், புதுக்குடியிருப்பு, வலைஞர்மடம், மாத்தளன் ஆகிய பகுதிகள் ஊடாக முள்ளிவாய்க்கால் பகுதியை மீட்கும் பாரிய நடவடிக்கை ஒன்று திட்டமிட்டுளளது.

சிறீலங்காப் படையினரால் முன்னெடுக்கப்படவுள்ள பேரழிவு யுத்தம் தமிழினத்தை அடியோடு அழிக்கும் இறுதி யுத்தமாக இது கருதப்படுகின்றது. நாளை பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் பலியெடுக்கப்படலாம் அஞ்சப்படுகின்றது.

இதனால் உலகப் பரப்பில் வாழும் தமிழர்கள் அனைவரும் நாளை திங்கட்கிழமை வீதியில் இறங்கிப் போராடுமாறு தமிழினம் அறைகூவல் விடுத்துள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.