இந்தியப் பிரதமரை நோக்கி ஷூ வீச்சு

dmkஇந்தியப் பிரதமர் மன் மோகன்சிங் அவர்களை நோக்கி ஷூ வீசப்பட்டுள்ளது. இப்பரபரப்புச் சம்பவம், இன்று குஜராத் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் தேர்தற் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மன்மோகன் சிங்கை நோக்கி கூட்டத்திலிருந்த ஒரு இளைஞர் ஷூ வீசியுள்ளார்.

ஆயினும், போலீஸார் குறுக்கே பாய்ந்து தடுத்த காரணத்தினால், ஷூ மேடை மீது விழவில்லை. உடனடியாகச் செயற்பட்ட காவற்துறையினர், அந் நபரை மடக்கிப்பிடித்தனர். ஆயினும் பிரதமர் அந்த இளைஞரை விட்டு விடும்படி கூறியதாகத் தெரிய வருகிறது. கடந்த வாரத்தில் மத்திய அமைச்சர் பா. சிதம்பரத்தின் மீதும் ஷூ வீசப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.