பாதுகாப்பு வலையத்தின் மீதான தாக்குதல் ஆரம்பம்: உக்கிர தாக்குதல் தொடர்கின்றன

முல்லைத்தீவின் வடகிழக்கு கரையோரத்தில் சிறீலங்கா அரசினால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு பிரதேசத்தின் மீதான இறுதித் தாக்குதலை சிறீலங்கா இராணுவம் இன்று (27) அதிகாலை ஆரம்பித்துள்ளதாக வன்னி தகவல்கள் தெரிவிக்கின்றன.

உக்கிரமான எறிகணை வீச்சுக்களுடன் இராணுவத்தின் முன்னனி படையணிகள் நகர்வை மேற்கொண்டுள்ளதுடன், அவர்களுக்கு ஆதரவாக கடற்படை கப்பல்களும் தாக்குதலை மேற்கொண்டு வருகின்றன.

படையினரின் நகர்வுகளை எதிர்த்து விடுதலைப்புலிகள் கடுமையான எதிர்த்தாக்குதல்களை மேற்கொண்டு வரும் அதே சமயம் இராணுவத்தின் தாக்குதல்களில் சிக்கி பெருமளவான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், பெருமளவான மக்கள் காயமடைந்துள்ளதாகவும் ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடுதலைப்புலிகளின் போர் நிறுத்த அறிவிப்பை உடனடியாக நிராகரித்த சிறீலங்கா அரச தரப்பு, போர் நிறுத்த அறிவித்தல் வெளிவந்த 24 மணிநேரத்திற்குள் தனது வலிந்த தாக்குதலை ஆரம்பித்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.