சிறி லங்கா மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க அமெரிக்கா தயாராகிவருகின்றது!

வன்னியில் தமிழ்மக்கள் பெரும் எண்ணிக்கையில் தங்கள் சொந்த வாழ்விடயங்களில் இருந்து இடம்பெயர்வது குறித்து அமெரிக்கா ஆழ்ந்த கவலை அடைந்துள்ளது.

ஏப்ரல் 21 ஆம் திகதி அமெரிக்க இராஜாங்க அமைச்சின் பேச்சாளர் ரொபேட் வூட் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், யுத்த சூனிய வலையத்தினுள் குண்டுத்தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றது. இராணுவ நடவடிக்கை அதிகரிக்கப்படுவதால் பொதுமக்களின் அவலங்களும் அதிகரித்து செல்வதாக நம்பகமான தகவல்கள் எமக்கு நாளாந்தம் கிடைத்துவருகின்றன.

சிறிலங்கா அரசாங்கத்தை யுத்த சூனியப்பிரதேசத்தினுள் மக்களின் நலன்கருதி குண்டுத்தாக்கதல்களை மேற்கொள்ளவேண்டாம் என திரும்பத்திரும்ப கேட்டுக்கொண்டிக்கின்றோம். அதேவேளை பொதுமக்களை யுத்தசூனியப்பிரதேசத்தில் இருந்து வெளியேற தமிழீழ விடுதலைப் புலிகள் தடைகள் எதையும் விதிக்கக்கூடாது எனவும் கேட்டுக்கொள்கின்றோம்.

ஐ.நா.முகவர்களை அனுமதிக்கவேண்டும் என்ற ஐ.நா.செயலாளரின் நிலைப்பாட்டை அமெரிக்காவும் வலியுறுத்துகின்றது. அதை நாம் பலமாக ஆதரிக்கின்றோம்.
அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டன் நோர்வே வெளிவிவகார அமைச்சருடன் சிறிலங்கா நிலவரம் தொடர்பாக விரிவாக ஆராய்ந்துள்ளார். வேறு பல நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களை சந்திக்கும்போதெல்லாம் இந்த விடயம்குறித்து விவாதித்துள்ளார்.

அவர் இந்த விடயம் குறித்து யார் யார் உடன் எல்லாம் விவாதித்துள்ளார் என்பது குறித்து என்னால் எந்த தகவல்களையும் வழங்கமுடியாது. அவர் சிறிலங்கா தமிழ் மக்கள் விடயத்தில் மிகவும் அக்கறை கொண்டவராக இருக்கின்றார்.
சிறிலங்கா பிரச்சினைகள் குறிதது நாம் தொடர்ந்தும் நெருக்குதல்களை கொடுத்துவருகின்றோம். நாம் செயற்பட்டே அகவேண்டிய மிகவும் முக்கியமான வெளிநாட்டுக்கொள்கை இது. நாம் தொடர்வோம்.

சிறிலங்கா அரசின் மீது கடினமான ஒரு நிலைபாட்டை அமெரிக்கா எடுக்கவுள்ளது என்பதை இந்த கருததுக்கள் கோடிட்டு காட்டுகின்றது. கடந்தாரம் அமெரிக்க வெளியுறவு தொடர்பான குழுவின் முன் கருத்து வெளியட்டபோது, அமெரிக்க இராஜாங்க அமைச்சர் ஹிலாரி கிளின்டன் இதனை வெளிப்படுத்தியுள்ளார்.

அவர் தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றிக் குறிப்பட்டபோது அவர்களை கிளாச்சியாளர்கள், என்ற பதத்திலேயே குறிப்பிட்டுள்ளார். மாறாக பயங்கரவாதிகள் என்று குறிப்பிடவில்லை. இதிலிருந்து ஒபாமாவுடைய நிர்வாகம் சிறிலங்கா அரசாங்கம் தொடர்பான கொள்கையினை புஸ் நிர்வாகத்தைப்போலன்றி அணுகுமுறையினை மாற்றிக்கொள்ள உத்தேசித்திருப்பதும் இதிலிருந்து தெரியவருகின்றது.

இதுகுறித்து நேற்று முன்தினம் அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவின் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில், பாதுகாப்பு வலயம் மீது சிறிலங்கா அரசாங்கத்தின் எறிகணை வீச்சுக்களை நிறுத்தும்படி கேட்டுக்கொண்டது. உதவி வழங்கும் அமைப்புக்கள் அங்கு சென்று மக்களுக்கு உதவுவதை சிறி லங்கா அரசாங்கம் தடுக்கக்கூடாது எனவும் கேட்டுக்கொண்டது.

இதற்கு முந்திய தினம் வழக்கத்திற்கு மாறான ஒரு நடவடிக்கையில் முல்லைத்தீவு பிரதேசத்தின் செய்மதி நிழற்படத்தினை அமெரிக்கா மிகத் தெளிவாக காட்டக்கூடியவாறு வெளியிட்டுள்ளது.

சர்வதேச நிறுவனங்களையும், ஊடகங்களையும் அப்பிரதேசங்களுக்கு செல்லவிடாமல் சிறிலங்கா அரசாங்கம் தடுத்தாலும், அங்கே என்ன நடக்கின்றது என்பதை அமெரிக்காவால் கூறமுடியும் என்பதை சிறிலங்கா அரசாங்கத்திற்கு உணர்த்தவே இவ்வாறு இந்த செய்மதிப்படங்கள் அமெரிக்காவால் வெளியிடப்பட்டுள்ளது எனக் கருதமுடியும். பொது மக்களின் வாழ் விடங்களைக் காடடுவதாக மிகத் தெளிவாக, மிக நெருக்கமான படங்கள் உள்ளன.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.