புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு தமிழீழ அரசியல்துறை பொறுப்பாளர் அவசர கோரிக்கை

nadesanசிறிலங்கா பாரிய மனித அழிவொன்றை வன்னியில் ஏற்படுத்தத் தொடங்கியுள்ள நிலையில் மக்களை வீதிக்கு இறங்கி போராடுமாறு தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இறுதிப் போர் என்று கூறுகிக்கொண்டு மிகக்குறுகிய பகுதிக்குள் மிக மோசமான தாக்குதலை சிறிலங்கா இராணுவம் ஆரம்பித்துள்ள நிலையில் இந்த அவசர கோரிக்கை புலம்பெயர்ந்த மக்களுக்கு நடேசன் அவர்கள் விடுத்துள்ளார்.

சர்வதேச நாடுகளின் மனச்சாட்சியை தட்டியெழுப்ப இந்த வரலாற்றுக் கடமையை அனைத்து தமிழ் மக்களும் ஒன்றிணைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.