முன்னேறும் இராணுவத்தை எதிர்த்து புலிகள் கடும் தாக்குதல் தரையிறங்க முயற்சித்த படகுகள் தாக்கியழிப்பு

ltte-fighters-1மீதமுள்ள புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை கைப்பற்றும் நோக்கில் இலங்கை இராணுவம் இன்று அதிகாலை 3.45 மணியளவில் பாரிய தாக்குதலை ஆரம்பித்துள்ளது.

வான், கடற்படை மற்றும் தரைப்படை என்பனவற்றை தாக்குதலில் பயன்படுத்தி, கனரக ஆயுதங்களையும் முன் நகர்த்தி பாரிய அழிவினை ஏற்படுத்த இலங்கை அரசு முனைகிறது.

கடும் முறியடிப்புச் சமரில் விடுத்லைப் புலிகள் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முள்ளிவாய்க்கால் ஊடாக இராணுவத்தினரை தரையிறக்கி தாக்குதலை நடத்த இராணுவம் திட்டமிட்டிருந்ததாகவும். பல படகுகளில் இராணுவத்தினர் தரையிறக்கத்துக்காக காத்திருந்த வேளை புலிகளின் RPG தாக்குதல் பிரிவு நடத்திய தாக்குதலில் பல படகுகள் சேதமானதாக தெரிவிக்கப்படுகிறது.

வட்டுவாகல் பகுதியில் புலிகள் அமைத்திருக்கும் பாரிய மண் அணையை உடைத்து பாதுகாப்பு வலயத்துக்குள் உள் நுளைய இராணுவம் கடும் முயற்சிகளை மேற்கொள்ளும் நிலையில் அங்கு நிலை எடுத்திருக்கும் புலிகள் கடும் தாக்குதலை தொடுத்திருப்பதுடன், புலிகளின் குறிசூட்டனியும் தொலைதூரத்தில் இருந்து தாக்குதல் நடத்துவதால் இராணுவத்தால் முன்னேறமுடியாத நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவர் இந்த தாக்குதலை நெறிப்படுத்துவதால் இராணுவம் பல இழப்புக்களை சந்திக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் , தற்போது வான் தாக்குதல்கல் அதிகரிக்கப்பட்டு கண்மூடித்தனமாக எறிகணைத் தாக்குதலும் நடத்தப்படுவதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.