படையினரின் முன்னேற்ற முயற்சி முறியடிப்பு பல இராணுவத்தினர் காயம்

ltte_monkilaru_outஇன்று அதிகாலை இராணுவத்தால் ஆரம்பிக்கப்பட்ட வலிந்த தாக்குதலை புலிகள் வெற்றிகரமாக முறியடித்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பலத்த இழப்புக்களை சந்தித்த இராணுவத்தினர் தமது பழைய நிலைகளுக்கு திரும்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் கடும் எறிகணை மற்றும் விமானத்தாக்குதல்களை தொடுத்திருப்பதாகவும் அறியப்படுகிறது. இன்று நடை பெற்ற விமானத் தாக்குதல்களில் 272 அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ள அதேவேளையில், மேலும் பல நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

கொழும்பு இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து சுமார் 20 அம்பூலன்ஸ் வண்டிகள் இராணுவ வைத்தியசாலை நோக்கி விரைந்திருப்பதாக, நேரில் கண்ட பலர் அதிர்வு நிருபரிடம் தெரிவித்துள்ளனர். காயமடைந்த இராணுவத்தினரே கொழும்பு சென்றடைந்ததாக உறுதிப்படுத்தப்படாத தகவல் ஒன்று தெரிவிக்கின்றது.
இன்று மதியம் சுமார் 3.00 மணியளவில் கிபீர் விமானங்கள் நடத்திய குண்டுத்தாக்குதலின் காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.