யேர்மனியில் பத்திரிகை காரியாலயத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்

dsc07224யேர்மனியில் நோட்ரைன் வெஸ்பாலின் மாநிலத்தில் வெளிவரும் பிரபல்யமான பத்திரிகையான Rheinische Post ல் வன்னி நிலவரம் சம்பந்தமாக டெல்லி நிருபர் வழங்கிய சிறீலங்கா அரசுசார்ந்து எழுதப்பட்ட நம்பகத்தன்மையற்ற செய்தியை ஒருதலைப்பட்சமாக வெளியிட்டமையால் கொதித்தெழுந்த தமிழ்மக்கள் இன்று காலை பத்திரிகை காரியாலயத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பத்திரிகை நிர்வாகத்தினர், தங்கள் நிருபர்கள் தரும் செய்திகளை வெளியிடுவது வழமையென்றும். எனிமேல் இவ்விடயத்தில் கூடுதல் கவனமெடுப்பதாகவும். ஈழத் தமிழர் இன அழிப்புச் செய்திகளை அக்கறை எடுத்து வெளிக்கொண்டுவர கூடுதல் முயற்சியெடுப்பதாகவும் வாக்குறுதி அளித்தனர்.

அவர்கள் கூறிய வாக்குறுதியை அடுத்து ரைன் நதியைக் கடக்கும் மேம்பாலத்தினூடாக கடந்து மக்கள் ஊர்வலமாக சொற்கொட்டொலிகள் முழங்கியவாறு மநில பாராளுமன்ற முன்றலில் வந்து கலைந்து சென்றனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.