பேர்லின் மாநிலத்தில் வெளிவிவகார அமைச்சின் முன்றலில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் – நூற்றுக்கணக்காணோர் எழுச்சியுடன் பங்கேற்பு

img_0761சிறீலங்கா அரசாங்கத்தின் அகோர இன அழிப்புத்தாக்குதலை கண்டித்து நேற்று (27.04.2009) பேர்லின் மாநிலத்தில் பல நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் யேர்மன் வெளிவிவகார அமைச்சின் முன்றலில் திடீர் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தினர்.

சர்வதேச நாடுகளின் கண்டனத்தால் சிறீலங்கா அரசாங்கம் தாம் கனரக ஆயுதங்களாலும், விமானக்குண்டுவீச்சாலும் தமிழ் மக்கள் மீதான தாக்குதல் நடாத்தப்படமாட்டாது என கொடுத்த உறுதிமொழியினை சில மணிநேரங்களால் அந்த உறுதிமொழியினை கடைப்பிடிக்காது; பாதுகாப்புவலயத்தில் சிக்கித்தவிக்கும் மக்கள் மீது அகோர குண்டுத்தாக்குதலை தொடர்ந்தனர்.

இவ் இன அழிப்பை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று இந்த கண்டன ஒன்றுக்கூடல் ஊடாக வலியுறுத்தினர்.

அத்துடன் யேர்மன் வெளிவிவகார அமைச்சருக்கு இகையோர்களால் தற்காலிக நிலவரம் அடங்கிய மனுவும் கையளிக்கப்பட்டது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.