வலைஞர்மடப் பகுதியில் உக்கிர மோதல்கள்

ltte-fightersவன்னியில் சிறீலங்காப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் உக்கிர மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. வலைஞர்மடப் பிரதேச்தில் இம்மோதல்கள் தீவிரமடைந்துள்ளன.

நேற்று திங்கட்கிழமை பகலும் இரவும் இப்குதியின் முன்னரங்க நிலைகளை உடைப்பதற்காக சிறீலங்காப் படையினர் மூர்க்கத்தனமாக பல்குழல் வெடிகணைத் தாக்குதல்கள், ஆட்டிலறிகத் தாக்குதல், வான் தாக்குதல், மற்றும் நாசகார ஆயுதங்களின் சூட்டாதரவைப் பிரயோகித்துள்ளனர்.

எனினும் முன்னரங்க நிலைகளைப் கைப்பற்றுவதற்கும் தக்க வைப்பதற்குமான உக்கிர சமர்கள் இப்பகுதியில் இடம்பெற்று வருகின்றன.

இப்பகுதியில் தஞ்சமடைந்த பல ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்து வட்டுவாகல் பிரசேதம் நோக்கி இடம்பெயர்ந்துள்ளனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.