தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்று ஒன்று இனி வரலாற்றில் இருக்கப் போவதில்லையாம் மகிந்தராஜபக்ஸ

rajapakse2தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுனமன்ற உறுப்பினர் ஒருவர் தன்னை அகதிமுகாம்களுக்கு செல்ல இராணுவத்தினர் அனுமதிக்கவில்லை என ஜனாதிபதியிடம் முறையிட்டுள்ளார்.

குறித்த பாராளுமன்ற உறுப்பினர் தாம் அகதி முகாம்களுக்கு சென்றுவர ஜனாதிபதியின் மூலம் அனுமதிபெற முற்பட்டபோது, அவரை அமைச்சுப்பதவியை ஏற்று அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுமாறு வற்புறுத்திய ஜனாதிபதி இனி எதிர் காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்று ஒரு அணி வரலாற்றில் இருக்கப்போவது இல்லை என தெரிவித்துள்ளதாக அறியப்படுகிறது.

அப்பாராளுமன்ற உறுப்பினரின் பாதுகாப்புக் கருதி அவரின் பெயரை நாம் வெளியிடவில்லை. இலங்கை ஜனாதிபதியின் இக் கூற்றுக்கள் மிகவும் ஆழமாக ஆரயப்படவேண்டிய ஒன்றாகும். அவர் எதிர்காலத் திட்டத்தை முன்கூட்டியே தெரியப்படுத்தி இருக்கிறார். இக் கூற்றுத் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.