ஜெயலலிதா அம்மாவிற்கு ஒரு ஈழத்தமிழனின் நன்றி மடல்

jayalalitha1அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் ஈழத்தமிழினத்துக்காக ஓங்கிக்குரல் கொடுக்கும் ஜெயலலிதா அம்மாவுக்கு,

லண்டன் தமிழர்கள் சார்பாக குறோளியில் வாழும் ஈழத்தமிழனின் நன்றிமடல் இது.
தமிழர் விடயத்தில் தாங்கள் எடுத்துள்ள ஆணித்தரமான முடிவானது உலகில்வாழும் 8கோடிதமிழர்கழுக்கும் நம்பிக்கை தருவதாயுள்ளது.ஒரு சிலர் மனதில் இது தேர்தல் வார்த்தை என்றுபட்டாலும் என் போன்ற பலரின்
நம்பிக்கை, அதாவது ஜெயா அம்மா ஒன்றைப்பற்றி கூறுவதற்கு முன் நன்றாக சிந்தித்தபின்பே கூறுவார்,கூறிவிட்டுமுன் வைத்தகாலை பின்வாங்க மாட்டார்
என்ற நிம்மதியில் உள்ளோம்.

அடுத்து வரும் காலங்களில் தாங்கள் முதலமைச்சராக வருவது உறுதி,தங்களால் ஈழத்தமிழினம் சுயநிர்ணயத்துடன் வாழ தனி ஈழம் மலரும்போது நாம் என்றென்றும் நன்றியுடையவர்களாக இருப்போம்.

ஏமாற்றுக்காரர்களை, பொசப்பு வார்த்தைகளை நாளுக்கு நாள் மாற்றிக்கூறும் நாடகக்கலைஞரை நம்பி தமிழினம் ஏமாந்தது போதும். இன்றும் அராஜக சிங்கள இராணுவம் பாரிய உலகில் தடைசெய்யப்பட்ட இரசாயன குண்டுகள், கொத்தணிக்குண்டுகள் கொண்டு குழந்தைகள், பெண்கள், வயோதிபர், இளையோர் என வயது வேறுபாடின்றி கொன்றுகுவிக்கிறது.

இன்னும் இன்னும் ஈழத்தமிழினம் அழிக்கப்படாதிருக்க, எம்மினம் தம் தம் சொந்தநிலத்தில், தாம் பிறந்தமண்ணில்,  தம் உற்றாருறவுகளோடு நிம்மதியாய் வாழ தங்களாலான முழுமுயற்சியில் செயற்படுவீரகள் என்ற திடமான நம்பிக்கையில் உள்ளோம்.

தங்களின் துணிச்சலான பேச்சிற்கும் செயற்பாடுகளுக்கும் எமது நன்றிகள்!

என்றென்றும் தமிழரின் தாகம் தமிழீழத்தனியரசு

நன்றியுடன்
சி.சிவா
crawley
United Kingdom
28.04.2009

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.