டென்மார்க்கில் தொடரும் பேரணிகள்! சீயலண்ட் நகர மக்களுக்கு ஏற்பாட்டாளர்கள் அறைகூவல்!!

dsc00364டென்மார்க் நகரங்கள் தோறும் கவனயீர்ப்புப் போராட்டங்கள், தீப்பந்தம் ஏந்திய மௌன ஊர்வலங்கள் போன்றவற்றை நடாத்திக் கொண்டிருக்கும் தமிழ் மக்கள் அதிகளவு டெனிஸ் மக்களுக்குக் தமது கோரிக்கைகளையும் அவசர தேவைகளையும் நடாத்தப்படும் பேரணிகளினூடாகவும் அவ்வேளையில் விநியோகிக்கப்படும் துண்டுப்பிரசுரங்கள், தமிழின கொடூர அழிப்பின் உண்மைச் சம்பவத்தை விளங்கவைக்கும் புகைப்படங்களினூடாக தெளிவுபடுத்தி வருகின்றனர்.

இன்று டென்மார்க் தலைநகர் கொப்பன்காபனில் மேற்கொள்ளப்பட்ட போராட்டமானது ஒரு திருப்பு முனைக்குள் தன்னைப் பிரவேசப்படுத்தியது. போராட்டங்களுக்கும், மனித நேயத்திற்கும் மதிப்பளித்து வெளிநாட்டமைச்சின் அலுவலர்கள் ஊர்வலத்தில் நின்ற மக்களைச் சந்தித்து ‘நீங்கள் போராட்டம் நடாத்துவதிலுள்ள வருத்தத்தை உணர்வதாகவும், தங்களால் உங்கள் போராட்டம் வெற்றியடைய வேண்டும் என்ற உணர்வும், நம்பிக்கையும் தங்களுக்கு இருக்கின்றதென்றும்’ கூறி தமிழ் மக்களின் துயரங்களில் பங்கெடுத்துக் கொண்டனர். கடந்த 3 மாதங்களாகக் கட்கப்பட்ட கோரிக்கைகளுக்கு உலகம் எடுக்கும் நல்ல முடிவுகளைத் தாங்களும் வலியுறுத்துவதாகவும் கூறினர்.

போராட்ட முடிவில் ஊர்வலமானது நகரத்தின் முக்கியவீதிகளினூடாக தமிழின அழிப்பின் சாட்சிகளை முக்கியப்படுத்தும் அவலப்படங்களைக் காவிச் சென்ற போது பணிமுடிந்து வீடு திரும்பிய டெனிஸ் மக்கள் பார்வையிட்டுச் சென்றனர். இது போன்ற அமைதிப் பேரணிகள் டென்மார்க்கின் பெரு நகரங்களிலான ஓடன்ஸ், ஓகூஸ் போன்ற இடங்களிலும் தமிழ்மக்கள் எழுச்சியுடன் நடாத்தி முடித்தனர். பிரபல டெனிஸ் பத்திரிகைகள் ஆர்வத்துடன் அங்கு வந்த மக்களுடன் கலந்துரையாடினர்.

டென்மார்க்கின் சீயலண்ட் பகுதியில் ஊர்வலங்களும், போராட்டங்களும் நடாத்தப்படும்போது தூரஇடங்களில் இருந்து தமிழ்மக்கள் வந்து கலந்து கொள்ளும் அளவிற்கு சீலண்ட் வாழ் தமிழ்மக்கள் இவற்றிற்குச் சமூகமளிக்காமை ஏற்பாட்டாளர்களின் மனங்களைப் பாதித்ததாக டென்மார்க் செய்தி வெளியீட்டாளருக்குத் தெரிவித்தனர். தொடர்ந்து நடைபெறும் போராட்டங்களிலும் ஊர்வலங்களிலும் சீயலண்ட் மக்களை வசதியின் பிரகாரம் மணித்தியாலக் கணக்கிலாவது கலந்துகொள்ளும் வண்ணம் தாழ்மையாகக் கேட்டுக் கொள்கின்றனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.