28.04.2009: யேர்மனி பிராங்போட்டில் இந்தியத்தூதரகம் முன் முற்றுகைப் போராட்டம்

_dsc8327தமிழ்மக்கள் தாயகப் பகுதியில் வகைதொகையின்றி கொல்லப்படுவதால் கொதிப்படைந்துள்ள யேர்மன்வாழ் தமிழ்மக்களின் கவனயீர்ப்புப் போராட்டங்கள் அண்மைக்காலமாக தீவிரமடைந்துவருகின்றது.
இதன் ஒருகட்டமாக இன்று பிராங்போட்நகரில் அமைந்துள்ள இந்தியத் தூதரகம் தமிழ் மக்களின் திடீர் முற்றுகைக்கு உள்ளானது. நேற்று செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் இத்தூதரகத்தின் முன்னால் ஒன்று கூடிய தமிழ்மக்கள் தமிழ்மக்கள் கொல்லப்படுவதற்கு இந்தியாவே காரணம்! இந்தியாவே போருக்கு உதவிசெய்வதை நிறுத்து! இந்தியாவே தமிழ்மக்களை அவர்களின் தாயக மண்ணில் நிம்மதியாக வாழவிடு! தமிழ்மக்கள் மீதான யுத்தத்தை நிறுத்து! விடுதலைப்புலிகளே தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகள் போன்ற கோசங்களை எழுப்பியவாறும் சுலோகங்களையும் தமிழர்களின் தேசியக்கொடிகளை கைகளில் தாங்கியவாறும் தூதரகத்தின் முன் கவனயீர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்

நேற்று மாலை 3 மணியளவில் சிறீலங்கா அரசபடைகளால் இன்றைய தினமும் பெருமளவு பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள்  என்ற செய்தி வந்தது இதனால் மேலும்  ஆத்திரமடைந்த மக்கள் தூதரகத்தை நோக்கி மூட்டை, கற்களால் வீசினார் இதனால் தூதரகத்தின் கண்ணாடிகள் சேதமடைந்தன.

இச்சம்பவத்தை அடுத்து 3 இளையோர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டார்கள் அது வரைநேரமும் தூதரகத்தின் முன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் இளையோரை காவல்துறையினர் விடுதலை செய்யவேண்டும் எனக்கோரி பிரதான வீதியில் அமர்ந்து கொண்டனர். இதனால் வீதிப்போக்குவரத்துக்கள் தடைப்பட்டன

1மணி நேரத்திற்கு மேலாக இவ் மறியல் போராட்டம் தொடர்ந்ததால் 26 கிலோமீற்றர் தூரத்திற்கு வாகன நெரிசல் ஏற்பட்டது. இதனை அடுத்து அவ்விடத்திற்கு வருகை தந்த காவல்துறை அதிகாரி மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் இன்னும் 1மணி நேரத்தில் 3 வரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற உறுதிமொழியை அடுத்து மக்கள் அனைவரும் பிரதான வீதி மறியலைக் கைவிட்டு தூதரகத்தின் முன்றலில் கூடினர். அடுத்த 1 மணி நேரத்தில் 3 இளையோரும் விடுதலைசெய்யப்பட்டார்கள் மாலை 7மணிவரை ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்மக்கள் அமைதியாகக் கலைந்து சென்றனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.