மன்னாரில் இளைஞரொருவர் சுட்டுக்கொலை

மன்னார் தாழ்வுப்பாடு பிரதான வீதியிலுள்ள கீரி கிராமத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை இனந்தெரியாத ஆயுததாரிகளால் இளைஞரொருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் கீரிப்பகுதியிலுள்ள விளையாட்டு மைதானத்தில் வலைப்பந்து விளையாடிக்கொண்டிருக்கையில் மாலை 5.30 மணியளவில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.உயிரிழந்தவர் மன்னார் பெரியகமம் பகுதியைச் சேர்ந்த தவசீலன் (வயது 23) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.