தமிழீழ கோரிக்கை தேசத் துரோகமாகாது: ஜெயலலிதா

jayalalitha-latestஇலங்கைத் தமிழர்களது உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில் தாம் முன்வைத்த தனித் தமிழீழ கோரிக்கை எவ்வாறு தேசத் துரோக குற்றமாகும் என அனைத்து இந்திய திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார். காங்கிரஸ் பேச்சாளர் கபில் சிபாலினால் நேற்றைய தினம் வெளியிடப்பட்டிருந்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் ஜெயலலிதா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலஙகையில் இலட்சக் கணக்கான தமிழ் மக்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தேசியவாதம் குறித்து சிபால் தமக்கு பாடம் கற்பிக்க வேண்டிய அவசியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனித் தமிழீழ கோரிக்கை சட்டத்திற்கு முரணானதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.