சிறிலங்கா எதிர்வினை எதிர்கொள்ள நேரிடும்: ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை

eu1சுவீடன் நாட்டின் வெளிவிவகார அமைச்சருக்கு சிறிலங்கா அரசு நுழைவு அனுமதியை வழங்க மறுத்தது மிகப்பெரும் தவறு; அதற்கான எதிர்வினையை அவர்கள் எதிர்கொள்ள நேரிடும் என்று ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்திருக்கின்றது.

இது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவரான செக்கோஸ்லோவோக்கியாவின் வெளிவிவகார அமைச்சர் கரேல் சுவார்சென்பேர்க் மேலும் தெரிவித்துள்ளதாவது:

சுவீடன் வெளிவிவகார அமைச்சர் கார்ல் பெல்ட்டுக்கு நுழைவு அனுமதியை சிறிலங்கா அரசு வழங்க மறுத்தது மிகப்பெரும் குற்றம். இது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் கருத்தில் எடுக்கும்.

சிறிலங்கா அரசின் இந்த நடவடிக்கை ஐரோப்பிய நாடுகளுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான உறவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சர் மற்றும் பிரான்ஸ் நாட்டின் வெளிவிவகார அமைச்சர்களுடன் பெல்ட் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். இவர்கள் இருவரும் ஐ.நா. பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்புரிமை உள்ள நாடுகளின் பிரதிநிதிகள்.

எனவே அவர்களுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் உள்ள நெருக்கத்தை விட சுவீடன் வெளிவிவகார அமைச்சருக்கு அதிக நெருக்கம் உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் செல்லவிருந்த பிரதிநிதி அவர் என மேலும் தெரிவித்தார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.