கிளிநொச்சியில் ஒரு குவான்டனாமோ மாதிரி சிறை

prisonகிளிநொச்சியிலும் அதனை அண்டிய பகுதிகளிலும், அமைந்துள்ள சில வீடுகளில், 15 வயது தொடக்கம் 35 வயதிற்கு உட்பட்ட இளைஞர் மற்றும் யுவதிகள் அடைக்கபபட்டுள்ளனர். இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரும் மக்களில் இளவயது பெண்களையும் , ஆண்களையும் தனியாக பிரித்தெடுத்து, சந்தேகத்தின் அடிப்படையில் இவர்கள் சிறு சிறு வீடுகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களை முழு நிர்வாணமாக்கி இருவர் இருவராக கைவிலங்கிட்டு வீடுகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இவர்கள் முழு நிர்வாணமாக இருப்பதால் தப்பிச்செல்லவழியின்றி வீடுகளில் இருப்பார்கள் என்ற காரணத்தால் இரணுவம் இந்த நிலையில் இவர்களை வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஒரு வேளை மட்டும் உணவு வழங்கப்படும் இந்த மர்ம சிறைச்சாலைகளில் கழிப்பிட அறைகளுக்கு அருகாமையில் இவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும். மலம் கழிப்பதற்க்கு கூட இருவராக செல்லும் நிலை காணப்படுவதாகவும் கூறப்படுகிறது. அடைக்கப்பட்டுள்ள வீடுகளில் முழு நிர்வாணமாக நுளம்புக்கடியுடன் மற்றும் பல அவஸ்தைகளில் தமிழர்கள் கைதிகளாக உள்ளதாக எமது புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

prison2குறிப்பாக பெண்கள் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வருவதாகவும் கூறப்படுகிறது. பல சிங்கள சமையல்காரர்கள் தற்போது கிளிநொச்சியில் இராணுவத்திற்காக வேலைசெய்து வருகின்றனர். அவர்களில் ஒருவர் மனம் தாங்கமுடியாமல் முடியாமல் கசிந்த செய்திகளே இவை. பல வாரங்களாக அடைக்கப்பட்டுள்ள இவர்கள் அனைவரும் அப்பாவி பொதுமக்கள் என தெரிவித்த அவர், அந்த மர்ம சிறைச்சாலைகளை புகைப்படம் எடுத்துத்தரவும் சம்மதித்துள்ளார்.

எம் இன மக்கள் இலங்கை இராணுவத்தின் கைகளில் சிக்கி சின்னாபின்னமாகின்ற ஆதாரங்களை சர்வதேச சமூகத்தின் முன் கொண்டுவரவேண்டிய பொறுப்பை மக்களாகிய உங்களிடன் நாம் ஒப்படைக்கிறோம்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.