முல்லைத்தீவு கடற்பரப்பில் கரும்புலிகள் தாக்குதல்; இராணுவத்தின் 2 டோரா படகு தாக்கியழிப்பு
-
இவ் விடயம் 29. 04. 2009, (செவ்வாய்),
தமிழீழ நேரம் 16:21க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள், விசேட செய்தி
புதிய தரையிறக்க முயற்சிக்காக 70 டோராப்படகுகள் பாதுகாப்பளிக்க இராணுவ துருப்புக்காவி படகுகள் முள்ளி வாய்கால் நோக்கி வந்துகொண்டிருந்த வேளை, இந்த பாரிய தொடரணி மீது கரும் புலிகளின் படகு மோதி தாக்குதல் நடத்தியுள்ளது.
இன்று அதிகாலை நடைபெற்ற இத்தாக்குதலில் இராணுவத்தின் 2 அதிவேக டோராப்படகுகள் தாக்கியழிக்கப்பட்டதாகவும் மற்றும் பல டோராப் படகுகள் சேதத்திற்கு உள்ளானதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் பாதுகாப்பு அமைச்சும் கடலில் கடும் சமர் இடம்பெற்றதை உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும் தமது சேதவிபரங்களை அது வெளியிடவில்லை.