டென்மார்க் தொலைக்காட்சியில் அரைமணிநேர நேரலையும் கலந்துரையாடலும்! கவனயீர்ப்புப் போராட்டத்தின் எதிரொலி!

pict0019உரிமைக்குக் குரல்கொடுக்கும் உணர்வுமிக்க போராட்டங்களை டென்மார் மக்களுக்கு தெளிவுபடுத்தும் கவனயீர்ப்புப் போராட்டங்கள் டென்மார்வாழ் தமிழ் மக்கள் தொடர்ந்தும் அனைத்து நகரங்களிலும் கடந்த 3 மாதங்களாகச் செயற்படுத்தி வருகின்றனர். 28.04.09 அன்று டென்மாரக் தொலைக்காட்சி நேரலையில் தமிழர் போராட்டங்களையும், அதன் கட்டமைப்புக்களையும் காட்சிப்படுத்தியபடி டென்மார்க் மக்களால் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி நடாத்தப்பட்டது. அரைமணித்தியாலங்களாக நடைபெற்ற இக் கலந்துரையாடலின் வாயிலாக தமிழர் பிரச்சனைகளை டென்மார்க் மக்கள் உள்வாங்கிக்கொண்டுள்ளனர் என்பதை அறிய முடிகின்றது.

தொடர்ந்தும் டென்மார்க்கின் தலைநகரான கொப்பன்காபனிலும், சீயலாண்ட்க்கு உட்பட்ட பிரதேசங்களிம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்ட அமைதி ஊர்வலங்கள் நடைபெற்றுக்கொண்ருக்கின்றன. 28-4-09அன்று ஒல்போ, கொஸ்றபே, விபோ, கேர்ணிங் போன்ற நகரங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

போராட்ட ஒருங்கமைப்பாளர்களினூடாக எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி (01.05.09) அன்று டென்மார்வாழ் தமிழ் அமைப்புக்கள் தலைநகரிலுள்ள பொது மைதானத்தில் ஆர்ப்பாட்ட அமைதிப் பேரணி ஒன்றை நடாத்துவதற்குத் திட்டமிட்டுள்ளனர். தொழிலாளர் தினமாகிய அன்று அம்மைதானத்தில் ஒரு இலட்சம் டெனிஸ் மக்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனூடாகப் பெரும்பாலான டெனிஸ் மக்கள் தமிழர் தம் பிரச்சனைகளையும் அவர்களுக்கான உடனடித் தேவைகளையும் மிகக் கூடிய கெதியில் உணரவைக்க ஒரு நல்ல சந்தர்ப்பமாகவும் அமையுமென அமைப்பாளர்களும் டென்மார்வாழ் தமிழ்மக்களும் கருதுகின்றனர்.

இப்போராட்டத்திற்கு டென்மார்க்வாழ் தமிழ்மக்கள் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.